மலையகம்

இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! தொடரும் மாணவர்கள் மரணம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் 14.11.2017 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் உயர்தரம் கல்வி கற்கும் 18 வயதான விரோஜன பண்டார என்பவரே உயிரிழந்தவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் தனது 11 நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டு நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.

இதனையடுத்து கினிகத்தேனை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரோடு , பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button