...
செய்திகள்

இளைஞர், யுவதிகளுக்கு இன்று (03) முதல் விசேட இலத்திரனியல் அடையாளஅட்டை

15 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாளஅட்டை இன்று (03) முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலோக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த அடையாளஅட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவை மன்றம் தெரிவிக்கின்றது.

இளைஞர், யுவதிகளின் கல்வி தகைமைகள், தொழில்பயிற்சி மற்றும் வேறு தகுதிகளை உள்ளடக்கிய வகையில், அவர்களில் தகவல்களை சேமித்து வைக்கும் வங்கி என்ற விதத்தில் இந்த அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அடையாளஅட்டையின் ஊடாக, தகுதி வாய்ந்த இளைஞர், யுவதிகளுக்:கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen