உலகம்

இவோ மொரால்ஸ் கியூபாவுக்கு விஜயம்

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவோ மொரால்ஸ் , கியூபாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பொலிவியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெப்ரியலா மொன்டேனோ தெரிவித்துள்ளார்.

இவோ மொராலஸ் , கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து கியூபாவில் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலிவிய ஜனாதிபதியாக பதவி வகித்த இவோ மொராலஸ், தன் மீதான எதிர்ப்புகளை அடுத்து பதவியை இராஜினாமா செய்தார்.

அதனையடுத்து அவர் தற்போது மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

Related Articles

Back to top button
image download