சிறப்புசெய்திகள்

இவ்வாண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்னும் சற்றுநேரத்தில்..!

இவ்வாண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்னும் சற்றுநேரத்தில் நிகழவுள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரியனை மறைப்பதால் சூரியனின் வெளிவிளிம்பு நெருப்பு வலயமாக காட்சியளிக்கும்.

இது கங்கண சூரிய கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 1.42 மணிக்கு ஆரம்பமாகி 4.11 மணியளவில் சூரிய கிரகணம் உச்சமடையும். அதனையடுத்து மாலை 6.41க்கு சூரிய கிரகணம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகள் சிலவற்றிலும் ரஷ்ய, கிறீன்லாந்து, கனடா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சில பிரதேசங்களில் கிரகணத்தை பார்வையிட முடியும்.

Related Articles

Back to top button
image download