விளையாட்டு

இவ்வாரம் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் பாராளுமன்ற அமர்வு .

(மாதுருபாகன் ராகவ்)

எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் மாத்திரம் பாராளுமன்ற அமர்வை
நடத்துவதற்கு கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் இணக்கம்
காணப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் தற்போதைய கொவிட் தொற்று நிலமை காரணமாக இவ்வாரம் இரண்டு
நாட்களுக்கு மாத்திரம் பாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதங்கிணங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை பத்து மணிமுதல் மாலை ஐந்து
முப்பது வரை நாட்டின் தற்போதைய கொரோனாத் தொற்று நிலமை தொடர்பான சபை
ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு
சட்டமூலம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்
நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுவரை சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com