உலகம்செய்திகள்

உச்சகட்டத்தை எட்டியுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் : யுத்தமாக மாறலாம், ஐ.நா அச்சம்.!

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில் 6 வயது சிறுவன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, சுமார் 130 ரொக்கட் தாக்குதல்களை நடத்திய்ள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் தெற்கு பிராந்தியமே, அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள், காஸா பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் பாலத்தீன போராளிகளுக்கும் இடையேயான மோதல், யுத்தமாக மாறலாம் என ஐ.நா அச்சம் வௌியிட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com