உலகம்செய்திகள்

இஸ்ரேலில் பரபரப்பான சூழ்நிலை : லொட் நகரில் அவசரகாலநிலை பிரகடனம்

இஸ்ரேலின் லொட் நகரில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நகரில் கலகமொன்று இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கலகத்தின் போது கார்களுக்குத் தீயிடப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் பிரிவினருக்கும், பலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்தக் கலகமும் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலை நோக்கி பலஸ்தீன ஆயுததாரிகளால் பலத்த ரொக்கட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக காஸா மீது இஸ்ரேலினால் வான்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பரஸ்பர தாக்குதல்களில் 40 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com