உலகம்செய்திகள்

இஸ்ரேல் – காசாவில் நூற்றுக்கணக்கான வான்வெளி தாக்குதல்கள் : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் முழுவதும் இருதரப்பு மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தது.

இதற்கிடையே இஸ்ரேலிய ஜெட் விமானங்களும் பாலஸ்தீனிய போராளிகளும் இன்று அதிகாலை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகங்கள் செயல்பட்டு வந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 35 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2014இல் குண்டுவெடிப்புக்கு பின்னர் காசாவில் நடத்தப்பட்ட மிகவும் தீவிரமான வான்வழித் தாக்குல்கள் ஆகும்.

Image

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com