மலையகம்

இ.தொ.கா. தோட்டதலைவர் மீது மலையமக்கள் முண்ணனி ஆதரவாளர்கல் தாக்குதல்.?

களனிவெளி தேயிலை பயிர்செய்கை நிறுவனத்திற்கு சொந்தமான பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட தேயிலை காணியை தோட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தோட்ட தலைவர் மீது மலையக மக்கள் முண்ணனியின் ஆதரவாளர்கள் 16பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதில் இலங்கை தொழிலாளர் காஙரசின் தோட்ட தலைவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த தாக்குதல் சம்பவம் 17.04.2018. செவ்வாய்கிழமை இரவு 07மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி பகிர்ந்தளிக்க போவதாக தோட்ட நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவுருத்தல் வழங்கியிருந்தது.

தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க இடமளிக்கமாட்டோம் என வழியுருத்தி பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட மக்களால் ஆர்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கபட்டது.

ஆர்பாட்டம் இடம் பெற்ற ரொப்கில் தோட்ட பகுதிக்கு விடயத்தை அறிந்த இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் குறித்த தோட்டப்பகுதிக்கு சென்று தோட்ட நிர்வாகத்தோடு கலைந்துரையாடி ரொப்கில் தோட்ட தேயிலை காணியை பகிர்தழிக்க வேண்டாமென கலந்துரையாடலின் போது தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.

அதற்கமைய மலையக மக்கள் முண்ணனியின் 16பேர் கொண்ட ஆதரவாளர்கள் 17.04.2018 செவ்வாய் கிழமை காலை ரொப்கில் தோட்ட தேயிலை கானி தோட்ட தொழிலாளர்களுக்கு பகிந்தலிக்கபட வேண்டும் மென கோறி எதிர்பினை வெளிபடுத்திஇருந்த வேலை மீண்டு இந்த பிரச்சினை தொடர்பில் குறித்த தோட்டத்தின் இ.தொ.கா.தோட்டதலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக பொகவந்தலாவ இ.தொ.கா.காரியாளயத்திற்கு சென்று கடிதம் ஒன்றை சமர்பித்து வீட்டு வீடு திருப்பி கொண்டிருந்த வேலையில் இவர் தாக்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகலில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மலையக மக்கள் முண்ணனியின் 16ஆதரவாளர்கலை கைது செய்யும் நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

ஹட்டன் நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button