உலகம்

ஈராக்கில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு.

ஈராக்கில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

நசிரியா பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நஜாப் நகரில் ஈரான் கன்சியூலர் அலுவலகத்தில் தீ வைக்கப்பட்டதையடுத்து மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊழல் மிக்க அரசாங்கத்தை கண்டித்தும் மோசமான பொதுச்சேவை மற்றும் தொழில் வாய்ப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button