உலகம்செய்திகள்

ஈராக் கொரோனா வைத்தியசாலையில் தீ ; 50 பேர் நோயாளிகள் பலி

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒக்சிசன் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ பற்றியதாக வைத்தியர் அமார் அல் ஜமாலி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் ஏற்பட்ட பாரிய தீயை சிவில் பாதுகாப்பு படையினர் வைத்தியசாலை பணியாளர்கள் அருகில் உள்ள தொண்டர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என வைத்தியர் ஜமாலி தெரிவித்துள்ளார்.

தீவிபத்து ஏற்பட்டவேளை எத்தனை பேர் வைத்தியசாலையில் இருந்தனர் என தெரிவிக்க மறுத்துள்ள வைத்தியர்கள் உள்ளே சிக்குண்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர் நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட வைத்தியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் தீபரவியதை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அதிகாரிகள் பதவி விலகவேண்டும் என சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

ஏப்பிரல் மாதத்தில் பக்தாத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 80க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

People react next to the body of a casualty outside al-Hussain coronavirus hospital after a fire, in Nassiriya, Iraq, July 13, 2021. REUTERS/Essam al-Sudani

Related Articles

Back to top button