உலகம்செய்திகள்

உக்ரைனில் கொத்தணி குண்டுகளை வீசிய ரஷ்யா!

தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தி, வடகிழக்கு உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக புதிய அறிக்கை கூறுகிறது.சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி,

உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் நகரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி ரஷ்யா நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தின் மீது மாஸ்கோ கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

கார்கிவில் குடியிருப்புப் பகுதிகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகள் வீசப்படுவது கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஆகும், கொத்து குண்டுகளால் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதுடன், காயப்படுத்தியது, மேலும் இது போர்க்குற்றங்களாகும் என்று கூறியது.

மேலும், கார்கிவில் ரஷ்ய துருப்புக்கள் 9N210 மற்றும் 9N235 கிளஸ்டர் குண்டுகள் மற்றும் சிதறக்கூடிய கண்ணிவெடிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button