செய்திகள்
உச்சமடைந்த மோதல்! அமைதியாக சபையில் நடந்த குழப்பங்களை அவதானித்த ரணில்
நாடாளுமன்றத்தில் ஏற்றப்பட்ட பதற்ற நிலைமைக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அணியினர் சபாநாயகர் அமர்ந்திருந்த ஆசனத்தை சுற்றிவளைத்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆசனத்தில் அமர்ந்து அமைதியாக சபையில் நடந்த குழப்பங்களை அவதானித்து கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரமதர் மஹிந்த ராஜபக்ச எதிரணியின் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சில உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.
மோதல்கள் உச்சமடைந்த போது மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சபையில் இருந்து வெளியேறியதாக குறிப்பிடப்படுகின்றது.