சமூகம்

உணவு விஷமானதால் 100இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

ஆடை தொழிற்சாலையில் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் 100இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் மினுவங்கொட, யகஹட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மினுவங்கொட மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவு பெற்றுக் கொண்டவர்களுக்கு, வாந்தி, வயிற்றோட்டம் மற்றும் மயக்கம் ஏற்பட்டமையினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com