செய்திகள்
உண்ணாவிரதம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது! போராட்டத்தை வலு சேர்க்க இளைஞர்களுக்கு அழைப்பு.

பெருந்தோட்ட மக்களுக்கு 1000/- அடிப்படை வேதனம் வழங்க கேட்டு நடத்தப்படும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
நேற்று இரவு பொழுதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரத்தை ரயில் நிலைய அதிகாரிகள் பலவந்தமாக அகற்றிய நிலையிலும் இந்த போராட்டத்தை குறித்த மூன்று இளைஞர்களும் தொடர்கின்றனர்.
மேலும் தங்களுடைய போராட்டத்தை வலு சேர்க்க மலையக உறவுகளும் , இளைஞர்களும் கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக ஒன்று கூடுமாறு அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.