அரசியல்உலகம்

உதயநிதி ஸ்டாலின் கைது – காரணம் இதுதான்.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை திரும்பி இலங்கைக்கே அனுப்பும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் இன்று போராட்டமொன்று நடத்தப்பட்டது.

தி.மு.க இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் இடம்பெற்றதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் சென்னை சைதாபேட்டையில் தி.மு.க இளைஞரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காப்பாற்று காப்பாற்று இலங்கை அகதிகளை காப்பாற்று,அனுப்பாதே அனுப்பாதே இலங்கைக்கு அனுப்பாதே எனும் கோஷத்துடன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அத்துடன் இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த போராட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தி.மு.க இளைஞர் அணியின் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டதன் பின்னர் ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“இலங்கை தமிழர்கள் மீண்டும் அந்நாட்டுக்கே திரும்பி அனுப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக எமது போராட்டம் தொடரும் “என கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சட்டம் ஒருபோதும் வழங்கப்படாது என இந்திய வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் நித்தியானந்த ராய் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button