செய்திகள்
உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.

மாவட்ட மனித உரிமைகள் ஆணையகத்தின் பணிப்பாளரும், நுவரெலியா மாவட்ட கிரிக்கட்
சபையின் பொருளாளரும், kavi Gold Loan உரிமையாளருமான திரு.பிரபாகரன் (பிரபா)
மற்றும் HillCool உரிமையாளர் நிசாந்தன், நுவரெலியா மாவட்ட மென்பந்து
கிரிக்கட் சபையின் இணைப்பாளர் நதீர, ஆசிரியர் புவனேஸ் மற்றும் சுரேஷ் ஆகியோர்
இணைந்து நிவாரண பொருட்களை இன்றைய தினம் வழங்கி வைத்தனர்.
இந்த நிவாரண திட்டத்தில் முதற்கட்டமாக டிக்கோயா தரவளை, போடைஸ், பட்ல்கல,
இன்ஜஸ்ட்றீ பிரதேசங்களில் 20ற்கு மேற்பட்ட கழகங்களை சேர்ந்த 130ற்கு மேற்பட்ட
வீரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிவாரண திட்டத்திற்கு இந்தியாவில் இருந்து திரு. ஜெயந் மேதா, லலித்
ஆகியோரும் பங்களிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது . இனி வரும் நாட்களில்
ஹட்டன், பன்மூர், கொட்டகலை, நோர்வூட் பிரதேச உதைப்பந்தாட்ட வீர்களுக்கும் அதே
போல மலையகத்தில் வறுமையால் அவதியுறும் மக்களுக்கும் தொழில் வாய்ப்பின்றி
இருக்கும் ஏனைய விளையாட்டு வீர்களுக்கும் இந்த நிவாரண பணி தொடருமென்றும்
கூறப்பட்டது.