...
செய்திகள்

உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண பணி

ஹட்டன் பிரதேச உதைப்பந்தாட்ட கழகங்களில் விளையாடும் வீரர்களுக்கு நுவரெலியா
மாவட்ட மனித உரிமைகள் ஆணையகத்தின் பணிப்பாளரும், நுவரெலியா மாவட்ட கிரிக்கட்
சபையின் பொருளாளரும், kavi Gold Loan உரிமையாளருமான திரு.பிரபாகரன் (பிரபா)
மற்றும் அவர்களின் நண்பர்களான HillCool உரிமையாளர் நிசாந்தன், நுவரெலியா
மாவட்ட மென்பந்து கிரிக்கட் சபையின் இணைப்பாளர் நதீர, ஆசிரியர் புவனேஸ்
மற்றும் சார்ள்ஸ் ஆகியோர் இணைந்து இன்று இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்களை
வழங்கி வைத்தனர்

இன்று நோர்வூட், பன்மூர் மற்றும் கொட்டகலை
பிரதேசங்களில் 35ற்கு மேற்பட்ட கழகங்களை சேர்ந்த 170ற்கு மேற்பட்ட
வீரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிவாரண திட்டத்திற்கும் இந்தியாவில் இருந்து திரு. ஜெயந் மேதா, லலித்
ஆகியோரும் பங்களிப்பு வழங்கினர்.

இனிவரும் நாட்களில் இந்த நிவாரண திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களும், நாளாந்த
வேலைகளை நம்பிருந்த தினசரி கூலி வேலையாட்களுக்கும் ஏனைய விளையாட்டு
வீரர்களுக்கும் இந்த நிவாரண பணி தொடரும் என்று கூறப்பட்டது.

விளையாட்டின் மூலம் வருமானம் தேடிய அதிகமான வீரர்கள் இன்று இந்த கொரோணா
சூழலில் பல்வேறுப்பட்ட சிக்கல்களை நாளாந்தம் சந்தித்து வருவதாகவும் இந்த
நிவாரணம் பெரிய உதவியாக அமைந்தது என்றும் தங்களின் நன்றியினை விளையாட்டு
வீரர்கள் தெரிவித்தனர்.

 

Related Articles

Back to top button


Thubinail image
Screen