உலகம்

உத்தர பிரதேஷில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்ட பெண் உயிரிழப்பு!

உத்தர பிரதேஷில் பாலியல் வல்லுறவு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் எரியூட்டப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தம்மை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரு இளைஞர்கள் மற்றும் அவர்களின் தந்தையரால் தாம் கத்தியால் குத்தப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டதாக குறித்த பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த  சந்தர்ப்பத்தில் உன்னாவோ பகுதி ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து அவர் தாக்கி எரியூட்டப்பட்டார்.

உத்தர பிரதேஷில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்ட அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button
image download