சமூகம்

உந்துருளியின் பின் ஆசனத்தில் பயணித்தவருக்கு நேர்ந்த கதி!

கஹாதுட்டுவ – தியகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிததுள்ளனர்.

ஹொரணை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தொன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளையே விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உந்துருளியின் பின் ஆசனத்தில் பயணித்தவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் உந்துருளியை செலுத்திய நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் தியகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கஹாதுட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

71 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button