செய்திகள்

உயர்தரப் பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும்.!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

இதேவேளை, பாடசாலைகளின் ஊடாக விண்ணப்பிக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள், தபாலின் ஊடாக அனுப்பிவைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com