செய்திகள்

உயர்தர கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்களுக்காக வீடியோ வகுப்புகள்-(வீடியோ இணைப்புகள் தரப்பட்டுள்ளன)

கடந்த 2019ம் ஆண்டு அவுஸ்திரேலியா தமிழ் பொறியியலாளர் அமைப்பினரின் பேராசிரியர் துரைராஜா ஞாபகார்த்த புலமைப்பரிசிலை பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். அப்போது COVID-19 காலம் என்பதால் online மூலமாக சகல பீட மாணவர்களிடமும் இருந்து 10 புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. பொறியியலாளர் அமைப்பினர் வழங்குவதால் தனியாக பேராதனை பொறியியல் பீடத்தின் 5 மாணவர்களையும் மீதி 5 மாணவர்களை ஏனைய அனைத்து பீடங்களில் இருந்தும் மிகவும் வரிய மாணவர்கள் எனும் அடிப்படையில் தெரிவு செய்ய முடிவு செய்தோம். விண்ணப்பங்களை ஆராய்ந்து மாணவர்களை தெரிவுசெய்ய தொடங்கும்போது ஆச்சரியம். மற்ற பீடங்களை ஒப்பிடும்போது பொறியியற் பீட மாணவர்கள் ஓரளவு வசதியானவர்களாகவே எங்களுக்கு வந்த விண்ணப்ப தரவுகள் தந்தன. நாங்கள் வேறு மாதிரி நினைத்திருந்தோம். எனவே இந்த ஆச்சரியத்தின் காரணத்தை தெரிந்துகொள்ள பல மாணவர்களிடம் விசாரித்தோம். ஒரு மிகப்பெரிய மற்றும் கவலைக்கிடமான உண்மை வெளிவந்தது. காரணம் என்னவென்றால் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் படிக்க மிகவும் வசதியானவர்களாலே மட்டும் முடிகிறதாம். வறிய மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான பணம் இல்லையாம். ஏனெனில் தனிப்பட்ட வகுப்புகள் (Private Tuition) செல்வதற்கு மாணவர்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறதாம். பாடசாலை பாட ஆசிரியர்கள் தங்களிடம்தாம் தனியார் வகுப்புகளுக்கும் வரவேண்டும் என மாணவர்களையும் பெற்றோர்களையும் கட்டாயப்படுத்துதல், மனசாட்சி அற்ற விதத்தில் மணித்தியாலத்திற்கான கட்டணங்களை அறவிடுவது, தன்னிடம் தனியார் வகுப்புகளுக்கு வராத மாணவர்களை பாடசாலையில் பழிவாங்குதல், இதனால் ஒரே பாடத்திற்கு ஒன்றிட்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு செல்லவேண்டிய அவசியம் போன்றன காரணமாக சொல்லப்பட்டது. இலங்கையில் இலவச கல்வி இப்போது எவ்வளவு பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது என உணரக்கூடியதாக இருந்தது. பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாத, மாணவர்களின் எதிர்காலமே முக்கியம் என்று கற்றுக்கொடுக்கும் பல ஆசிரியர்களும் பிறதேசங்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் பாடசாலை கல்வி இப்போது சில ஆசிரியர்களின் பெரும் வியாபாரமாக ஆகிவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்று நான் வாசித்த Rivanisha Sundharam அவர்களின் பதிவும் இதைத்தான் சொல்கிறது (Click Here – tinyurl.com/Rivanisha-FB-Post).

ஆனாலும் காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. கல்விகற்பதற்கான வளங்கள் இலவசமாக மாணவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருகிறது. மாணவர்கள் உண்மையை உணர்ந்து முயற்சிகள் செய்தால் பெரும் பணம் கொடுத்து கல்வியை பெறுவதை தவிர்த்து கொள்ளலாம். மாணவர்களிடம் அதிக கொள்ளையிடும் ஆசிரியர்களை பாடசாலை அதிபர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். வறிய மாணவர்களும் தாங்கள் விருப்பமானதை கற்றிட வழிவகை செய்திட வேண்டும். பல்வேறு கனவுகளுடன் கணிதம், விஞ்ஞானம் கற்க வரும் மாணவர்களின் ஆசைகளை ஆசிரியர்கள் களைந்திட அனுமதிக்ககூடாது (நான் இங்கு குறிப்பிடுவது எல்லா ஆசிரியர்களையும் அல்ல). இந்த விடயங்களில் பெற்றோரும் மிக கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.

மாணவர்கள் இலவசமாக உயர்தர கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் பாடங்களை கற்க நிறைய இணைப்புகளை இத்துடன் தந்திருக்கிறேன். இவை வடமாகாண கல்வி திணைக்களம், யாழ் இந்து கல்லூரி, e -Tech Lab எனும் தளங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பட்டியல். 100 ரூபாவிற்கு dialog தரும் unlimited youtube package ஒன்றின் மூலம் 500 இற்கும் பாட அலகுகளை இந்த linkகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் (www.dialog.lk/unlimited-youtube-for-all-dialog-power-plan-customers). இந்த youtube பக்கங்கள் தொடர்ந்து புதிய பாட அலகுகளை உள்ளடக்கி கொண்டிருக்கும். உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இதனை share செய்துகொள்ளுங்கள். இது தவிர இன்னும் நிறைய இனைய வளங்கள் இருக்கும். தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் (commentஇல்) பதிவு செய்யுங்கள்.

நன்றி
கலாநிதி S. K. நவரட்ணராஜா
சிரேஷ்ட விரிவுரையாளர்
பொறியியற் பீடம்
பேராதனை பல்கலைக்கழகம்

1) இணைந்த கணிதம் – Combined Maths (48+ Videos)
https://www.youtube.com/watch?v=2I9t3kKWgCk&list=PLS0lPAJ4WwyI48ftXx3Qc3koikhdZpCvB

https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsnYtHY_s4GBpqLSkS6Jx0Jh

2) பெளதிகவியல் – Physics (259+ Videos)
https://www.youtube.com/playlist?list=PLS0lPAJ4WwyJQyr0_kXDv-ESDSE4pvCp9

https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGslpiYHDADy5tMvVizkg5wSr

3) இரசாயனவியல்- Chemistry (201+ Videos)
https://www.youtube.com/playlist?list=PLS0lPAJ4WwyI1xRjhB5Qc1AmG5lraRvrv

https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsmm3TEra6YowOqAH92jvwOZ

4) உயிரியல் – Biology (153+ Videos)
https://www.youtube.com/playlist?list=PLS0lPAJ4WwyKBmYkV_UYOgyXGf4hP6Wb1

https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsluSQUzg5afsDtiAU5FVWQb

5) பொறியியல் தொழினுட்பவியல் – Engineering Technology (17+ Videos)
https://www.youtube.com/playlist?list=PLS0lPAJ4WwyKyXKISSrm1pGA84j0GjCIL

https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsmiU1LPso3iLpBmc8Mmvn20

6) உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் – Biosystems Technology (47+ Videos)
https://www.youtube.com/playlist?list=PLS0lPAJ4WwyKUGXPvJB3Ok8JsEMsXz1U_

https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsnT6IqA_Ur7dGgmM1oAVYWU

7) விவசாய விஞ்ஞானம் – Agricultural Science (16+ Videos)
https://www.youtube.com/playlist?list=PLS0lPAJ4WwyKjkwm_O8sP82Y7wBp0oJzY

https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsnM5wDTZdMvyRIw-hembT6G

9) E-Tech Practicals (16+ Videos)
https://www.youtube.com/playlist?list=PL9c_uRizHXPLtU-wJEG8eUr_gmFD7etpb

10) Jaffna Hindu College Online Classes

Online Class – 2020 Batch
https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsm5eoCwWkzNsOqS5pLPUUyy

Online Class – 2021 Batch
https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGsnN534KbQ4tzlpF2Ef0HBTR

Online Class – 2022 Batch
https://www.youtube.com/playlist?list=PLZ73qEJ5eGskgN0DMai6ovW7YvIeHit2r

11) நூலக நிறுவனத்தின் ஆவணகம் – பள்ளிக்கூடம் – திறந்த கல்வி வளங்கள்
aavanaham.org/open-educational-resources

12) e-Kalvi by Jaffna University Graduates Association-Victoria Inc. (JUGA-Vic Inc.)
www.ekalvi.org/e-lessons/

Please make use of these resources.

Thank you.
Dr. S.K. Navaratnarajah, PhD
Senior Lecturer
Faculty of Engineering
University of Peradeniya

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com