செய்திகள்

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் எப்போது.?

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படும் நிலமை உருவாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே அதற்கான காரணமாகும். கொரோனா நிலமை தொடர்பில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பரீட்சைகளுக்கான திகதியை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா நிலமை காரணமாக 2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான ஆங்கில பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் சாதாரண தரப்பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை தொடர்பில் தீர்மானிப்பதற்காக நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உயர்அதிகாரிகள், மாகாண கல்விப்பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை 2020 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button