செய்திகள்

உயர் கல்வி மாணவர்களுக்கு தடுப்பூசி.!

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கல்வி நோக்கத்துக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான சைனோபார்ம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தேவையுள்ள மாணவர்கள் இன்று (02/07) முதல் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியாக முன்பதிவுகளை மேற்கொண்ட பின்னர், தடுப்பூசி செலுத்தப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் என்பன குறுந்தகவல் ஊடாக மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். தடுப்பூசி செலுத்துவதற்கான முன் பதிவுகளை மேற்கொள்ள https://pre-departure-vaccine.covid19.gov.lk எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button