கல்விசெய்திகள்

உயர் தர செயன்முறை பரீட்சைகளில் தோற்றவுள்ள, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்…

2020 கல்வி பொதுத்தராதர உயர் தர செயன்முறை பரீட்சைகளில் தோற்றவுள்ள, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்காக பரீட்சைகள் திணைக்களத்தால் விசேட அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இவர்கள், தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி செயன்முறை பரீட்சைகளில் தோற்றலாமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சார்த்திகள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கே செல்ல வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

2020 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக செயன்முறை பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button