கல்விபதுளை

உயிரியல் தொழில் நுட்பப் பிரிவில் பசறை தமிழ் தேசிய பாடசாலை மாணவன் ஹாலிது அன்வர் மொஹமட் ஜமீல் சாதனை.

உயிரியல் தொழில் நுட்பப் பிரிவில் பசறை தமிழ் தேசிய பாடசாலை மாணவன் ஹாலிது அன்வர் மொஹமட் ஜமீல்சாதனை.

வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் படி பசறை கல்வி வலயத்தில் உள்ள பசறை தமிழ் தேசிய கல்லூரியில் உயிரியியல் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 16 மாணவர்களுள் 14 பேர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.எம். சி. பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

இவர்களில் ஹாலிது அன்வர் மொஹமட் ஜமில் என்ற மாணவன் 3 ஏ சித்திகளைப் பெற்று பதுளை மாவட்ட மட்டத்தில் 3ஆம் நிலையை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

செல்வி.தேவேந்திரன் தனுஷானி 1ஏ, 2பீ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4ஆம் நிலையிலும், செல்வி ஐ. கிரிஷானி 3பீ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 15ஆம் நிலையிலும், செல்வி. நுவானி நிரோஷா 2பீ, 1சீ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 18 ஆம் நிலையிலும் உள்ளனர்.

இம் மாணவர்களில் 4 பேர் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஏனைய மாணவர்கள் பட்டக்கல்வியை தொடரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். குறித்த மாணவர்கள் அண்மையில் வாகன விபத்தொன்றில் உயிர் நீத்த ஆசிரியர் அமரர் தூஷாந் இடமும் ஏனைய பாட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றவர்களாவர்.

இவ்வாசிரியர்களை பாராட்டுவதோடு மூன்று ஏ சித்திகளைப் பெற்று மாகாணத்தில் 3ஆம் நிலையையும் தேசிய ரீதியில் 52 ஆவது நிலையையும் பெற்று சாதனைப் படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த ஜமீலின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.


கற்பித்து வழிகாட்டிய ஆசிரியர்களையும் மாணவன் மொஹமட் ஜமீலையும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்,புவியரசன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com