செய்திகள்

உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, ரிஷாட்டின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, ரிஷாட் பதியூதீனின் கொழும்பு − பெளத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரவிகுமார், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் S.ஆனந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை, சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக அரசாங்கம் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button