மலையகம்

உயிரிழந்த நிலையில் சிறுத்தை -டிக்கோயாவில்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – டிக்கோயா ஹட்லி தோட்டத்தில் கைவிடப்பட்டு காடாக காணப்பட்ட தேயிலை மலையில் இருந்து நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று இன்று காலை 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை அப்பகுதி வழியாக தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தையின் உடலத்தில் கால்கள் இல்லாத, உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதோடு, இதேவேளை காகங்களால் சிறுத்தையின் கால்களை இழுத்துச் சென்று ஆங்காங்கே வீதிகளில் போடப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது.

இச்சம்பவம தொடர்பில் குறித்த சிறுத்தையின் உடலம் நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி திணைக்கள த்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சிறுத்தையை நஞ்சு வைத்து கொன்றுள்ளார்களா? அல்லது வேறு எதுவும் காரணங்களால் உயிரிழந்துள்ளதாக என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button