...
உலகம்

உயிரையும் துச்சமாக மதித்து வீதிக்கு போராட இறங்கிய ஆப்கானிஸ்தான் பெண்கள்.

காபூலின் ஷார்- இ-நவ் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்றிணைந்து ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகையை நோக்கி எதிர்ப்பு பேரணியில் ஈடுப்பட்டனர்.

“பாகிஸ்தானுக்கு மரணம், தலிபான்களுக்கு மரணம், நம் நாட்டை ஏமாற்றியவர்களுக்கு மரணம்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தலிபான்கள் வெற்றுத் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.

ஆப்கானிஸ்தானின் பெண்கள் தங்கள் உரிமைகளை இழந்துள்ள நிலையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் புலனாய்வு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் தலிபான்களை சந்தித்திருந்தார்.

இது அண்டை நாட்டின் மீது பாகிஸ்தானின் வளர்ந்து வரும் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது.

எவ்வறாயினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலும் பெண்களே முன்னின்று கோஷமிட்டனர். தலிபான்களுக்கு ஆதரவான பாக்கிஸ்தானின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தனர்.

பிற்பகல் 3:30 மணியளவில் ஷாஹர்-இ-நாவ் மாவட்டத்தில் மற்றொரு போராட்டம் தொடங்கியது. கிட்டத்தட்ட 20 வயதிற்குட்பட்ட பெண்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“உயிரை இழந்தாலும் பரவாயில்லை உரிமைக்காக போராடுவோம்” என எதிர்ப்பு நடவடிக்கைளியில் ஈடுப்பட்ட ஆப்கான் பெண்கள் கோஷமிட்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen