செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மற்றுமொரு சூத்திரதாரி கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் ஒருவர் சந்தேக நபர் மாவனெல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிம் 2018 ம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் முஸ்லிம் மாணவர்களை தொடர்புபடுத்தி விரிவுரைகளை நடத்தியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இனவாத நோக்கங்களை மனதுக்குள் புகுத்தும் வகையில் வகுப்புக்களை நடத்தி அதில் முன்னணி வகித்த 13 பேர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதுடைய மாவனெல்லை பகுதியைச் சேர்ந்தவராவார். இந்நபரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

Back to top button