உலகம்செய்திகள்

உயிர் நீத்த உறவுகளுக்காய் அவுஸ்திரேலியாவில் சிறப்பு பிரார்த்தனை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையில் உயிரிழந்த உறவுகள், காயமடைந்த உறவுகள், மற்றும் உறவுகளை இழந்து அல்லல்படும் குடும்பங்களையும் ஆற்றுப்படுத்தும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுப்பும், அமைதி வழி மெழுகுவர்த்தி ஆராதனையும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள St. Mary’s Cathedral தேவாலயத்தில் இன்று நிகழ்ந்தது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Video”][/siteorigin_widget]
இதேவேளை பலி கொள்ளப்பட்ட உறவுகளின் மீதான அஞ்சலி மற்றும் காயப்பட்டு படுக்கையில் வீழ்ந்திருக்கும் அப்பாவி மக்கள் மீளத் தம் வாழ்வைக் கட்டியெழுப்ப, சிட்னியில் தமிழர் செறிந்து வாழும் Pendle Hill இல் மெழுகுவர்த்திப் பிரார்த்தனை நிகழ்வொன்று இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Video”][/siteorigin_widget]
தகவல் மற்றும் காட்சி உதவி – கானா பிரபா (அவுஸ்திரேலியா)

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com