மலையகம்

உயிர் போகும் வரை தோட்ட தொழிலாளர்களுக்காக என் போராட்டம் தொடரும்

 

அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து ஜனாபதியை சந்திக்க வேண்டும் என ஒருவர் தனியாக உடம்பில் 1000 வேல்களை குத்திய நிலையில் கொழும்பு நோக்கி நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த நடைபயணம் இன்று மாலை 04 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து தோட்ட மக்களின் சம்பளத்துக்காக போராடியவர்களில் ஒருவரே இவ்வாறு நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நடை பயணம் தொடர்பாக அவர் குறிப்பிடும் போது ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தலை இடும்வரை தாம் உணவு ,தண்ணீர் எடுக்க போவதில்லை எனவும், இந்த சம்பள போராட்டம் இனி என்னோடு முடிவுக்கு வரவேண்டும் இல்லையேல் நான் தோட்ட மக்களுக்காக உயர் துறக்கவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button