...
செய்திகள்

உரம் ,மருந்து  பெற்றுத் தருமாறு கோரி நுவரெலியாவில்   ஆர்ப்பாட்டம்

 டீ- சந்ரு
விவசாயத்திற்கான உரம்,மருந்தினை தடையின்றி  வழங்குமாறு கோரி நுவரெலியா நகரில்  (21) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 
விவசாயிகளின் அவசரத் தேவையையும், உரத்தட்டுப் பாட்டையும்  சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விலையை உயர்த்துகின்றனர். “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாய செலவிற்கு இடையில் உரம் தட்டுப்பாடாலும், விலையேற்றத்தாலும், விவசாயத்தில் வருமானம் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது .
ஆகவே பொது மக்களின்  தேவைக்கு ஏற்ப  அரசு காலதாமதம் இன்றி அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் மருந்து  கிடைக்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் ,
அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறும் வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இவ் போராட்டம் பதுளை பிரதான வீதியில் உள்ள காமினி பாடசாலைக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பழையகடை வீதியுடாக  நுவரெலியா பிரதான  தபால் நிலையம் வரை ஊர்வலமாக வந்தடைந்தது.நுவாரெலியா நகரில் உள்ள  வியாபார நிலையங்களை பூட்டி போராட்டத்திட்கு ஆதரவை வழங்கினர்
மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கறுப்பு கொடி காட்டிய வண்ணம்  பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Back to top button


Thubinail image
Screen