மலையகம்

உரிய நேரத்தில் கடிதம் கிடைக்காததால் பல்கலை கழக வாய்ப்பை இழந்த போட்மோர் தோட்ட மாணவி.?

உரிய நேரத்தில் கடிதம் கிடைக்காததால் நேர்முகத் தேர்வை தவறவிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாவானது.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்துவிட்டு பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பித்த அக்கரபத்தனை வேவர்லி போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கே இவ்வாறான நிலை ஏற்பட்டது.

கடந்த (19.07.2019) மாதம் 19 ஆம் நடைபெற்ற நேர்முக தேர்விற்காக, 08.07.2019 திகதியிடப்பட்ட கடிதம் குறித்த கல்லூரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.அக்கரபத்தனை உப தபாலகத்தின் ஊடாக அனுப்பப்பட்ட மேற்படி கடிதம் வேவர்லி தோட்ட காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஒரு கிழமை கழித்து உரிய பெயர் கொண்ட நபர் இந்த தோட்டத்தில் இல்லையென மீண்டும் அக்கரபத்தனை தபாலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதாக தகவல்றிந்த குறிப்பிட்ட மாணவி தனக்கு நேர்முக கடிதம் வராததால் மனமுடைந்த நிலையில் 30.07.2019 அன்று அக்கரபத்தனை தபாலகம் சென்று கேட்ட போது நேர்முகத்தேர்விற்காக கடிதம் பதிவுத்தபால் மூலம் வந்த கடிதத்தை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

எனினும் கடிதத்தை பிரித்து பார்த்து அவர்க்கான நேர்முகத் தேர்வு 19.07.2019 திகதி என குறிப்பிட்டருந்ததை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகி கண் கலங்கினார். பின்னர் அக்கரபத்தனை தபாலகத்தின் அதிபரிடம் அவருக்கான நேர்முகத் தேர்வு கடிதம் பிந்தி கிடைத்தமைக்கான காரணக்கடித்தை பெற்று விசேட பிரதேசங்களுக்கான இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணணின் உதவியுடன் ஆகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் நேர்முகத் தேர்விற்கு சென்று நேர்முக தேர்விலும் பங்கேற்றார்.

இதே மாணவி கடந்த வருடம் கிழக்கு பல்கலைக் கழகத்துதுக்கு விண்ணப்பித்து நேரமுகத் தேர்வன்று கடிதம் கிடைக்கப் பெற்றதால் பல்கலைக்கழக வாய்ப்பையும் தவறவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக ஊட்வில் தோட்டத்திலும் நேரத்தோடு கடிதம் கிடைக்காத காரணத்தால் கல்வியியற் கல்லூரிக்கான வாய்ப்பை இழந்த மாணவர்கள் இருக்கிறார்கள். மேற்படி வேவர்லி,ஊட்வில் ஆகிய இரு தோட்டங்களிலும் தபால் ஊழியர்கள் இல்லை.பெருந்தோட்ட பகுதிகளில் பணியாற்றவும் தபால் சேவையை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையிலும் 2008 ஆம் ஆண்டு வழங்கபட்ட தபால் ஊழியர் நியமனங்களில் மேற்படி இரு தோட்டங்களுக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்ட வில்லை.இரு தோட்டங்களிலும் மொத்தமாக பத்து பிரிவுகள் உள்ளது.2008 ஆம் ஆண்டு பெருந்தோட்ட பகுதிக்காக 500 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்களில் முதல் கட்டமாக 346 பேருக்கே வழங்கப்பட்டது.

மிகுதியான 154 பேருக்கான நியமனம் 12 வருடங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லை.
இந்த நியமனத்தை விரைவுபடுத்தி இதிலாவது மேற்குறிப்பிட்ட இருதோட்டங்களுக்கும் தபால் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது குறிப்பிட்ட இரு தோட்டங்களிலும் மக்களுக்கான தபால் சேவையை பெற்றுக்கொள்ளும் சரியான முறைமையை தோட்ட நிர்வாகங்கள் உறுதிபடுத்த வேண்டும்.
நவீன தொலை தொடர்பு சாதனங்கள் வசதிகள் கொண்ட இந்த காலத்தில் நம் மக்களில் இன்னும் ஒரு சாரார் தபால் சேவையையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை கவலையளிக்கிறது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆ .ரெ .அருட் செல்வம்

Related Articles

Back to top button
image download