உலகம்செய்திகள்

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

இந்தியாவில் பரவிவரும் உருமாற்றம்பெற்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு கவலையளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய திரிபு கொரோனா வைரஸ் தொடர்பில் முழு உலகமும் கவனஞ் செலுத்த வேண்டும். அந்த வைரஸ் மிகவும் வீரியம் கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

B-1,167 என்று அறியப்படும் புதிய வகை கொரோனா ஏனைய கொரோனா வகைகளை விடவும் மிகவும் வீரியம் கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா மரணங்கள் துரிதமாக அதிகரித்துள்ள நிலையில் சடலங்களின் இறுதிக் கிரியைகளுக்கு போதுமான இடம் இல்லாததனால் சிலர் சடலங்களை கங்கைகளில் வீசிச்செல்வதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா மரணம் காரணமாக சடலங்களின் இறுதி கிரியைகளுக்காக தற்சமயம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download