அரசியல்செய்திகள்

உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களிடமும் ஒழுக்காற்று விசாரணை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களிடமும் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்ப அபேவர்தன, ஏ.எச்.எம் பௌசி மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலமாக இதுகுறித்த அறிவித்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்காகவே குறித்த ஐவரினதும் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதாக ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக அவர்களுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அதற்கான பதில்களை குறித்து ஐந்து உறுப்பினர்களும் அனுப்பிவைத்த போதிலும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download