...
உலகம்

உலகளவில் 300 கோடி பேர் இணையத்தளம் பயன்படுத்துவதில்லை – ஐ.நா தகவல்

வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதமானோர் இணைய இணைப்பு வசதியே பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் உலகில் இணையத்தள சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இணையத்தளம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக, இணையத்தளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 4.1 பில்லியனாக இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.

உலகளவில் இப்படிப்பட்ட வளர்ச்சி அதிகரித்திருக்கும் நிலையில், உலக மக்கள் தொகையில் சுமார் 300 கோடி பேர் இன்னும் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும், வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதம் பேர் இணைய வசதி இணைப்பே பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen