உலகம்செய்திகள்

உலகளாவிய அளவில் கொரோனா மரணங்கள் 38 இலட்சத்தை தாண்டியது.!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாதித்து வருகின்றது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.82 கோடியை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 178,203,523 பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 162,710,235 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளதுடன் 3,857,939 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 11,635,349 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 82,420 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக அதிக கொவிட் பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.

Related Articles

Back to top button