உலகம்செய்திகள்

உலகளாவிய ரீதியில் 4,002,841 ஐ கடந்துள்ள கொரோனா மரணங்கள்..!

உலகளாவிய ரீதியில் 220 நாடுகளில் இதுவரை கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தினை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் 6 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றினால் 18 கோடி 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தானபம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 3 இலட்சத்து 36 ஆயிரத்து 323 பேர் அடையாளர் காணப்பட்டுள்ள அதேவேளை இந்தியாவிலிருந்து அதிகூடுதலானோர் அடையாளர் காணப்பட்டுள்ளனர். இதில் 34 ஆயிரத்து 67 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, 552 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் அமெரிக்காவில் 4 ஆயிரத்து 405 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 23 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

உலகில் இதுவரை இடம்பெற்றுள்ள மொத்த கொரோனா மரணங்களில் 50 சதவீத மரணங்கள் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஷ்யா முதலான 5 நாடுகளில் பதிவாகியுள்ளன.

Related Articles

Back to top button