உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

உலகில் முதற்தடவையாக புலியொன்றின் கண் பாதுகாக்கப்பட்டுள்ளது.!

சத்திரசிகிச்சையின் மூலம் உலகில் முதற்தடவையாக புலியொன்றின் கண் பாதுகாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஜிற்கு அருகிலுள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும், ரட்னா எனும் பெயர்கொண்ட 17 வயதான சுமாத்ரா புலிக்கே இந்தச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண்புலியின் இடது கண்ணில் படர்ந்திருந்த cataract முன்னர் அகற்றப்பட்டிருந்த நிலையில், அந்தக் கண் மோசமடைந்து செல்வதை, சரணாலய ஊழியர்கள் அவதானித்தனர். கண்ணின் கருவிழிப்படலத்தில் புண்ணொன்று உருவாகியிருப்பதை, கண் தொடர்பான விசேட விலங்கு சத்திரசிகிச்சை நிபுணர் கண்டறிந்தார்.

கருவிழிப்படல சத்திரசிகிச்சை, வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு மேற்கொள்ளப்படுவது வழமையானது என்கின்ற போதிலும், ரட்னா பெண்புலிக்கு, மேலதிக மயக்கமருந்து பெருமளவில் தேவைப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததுடன், இரண்டு மாதங்கள் விசேட கண்காணிப்பின் பின்னர், கண் முழுமையாகக் குணமடைந்துள்ளதாக சத்திரசிகிச்சை நிபுணர் டேவிட் வில்லியம்ஸ் உறுதிப்படுத்தினார்.

Related Articles

Back to top button
image download