சிறப்புசெய்திகள்

உலக எய்ட்ஸ் தினம் இன்று..

உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

தாயிடமிருந்து சிசுவிற்கு எச் ஐ வி தொற்று பரவாத நாடாக இலங்கை , உலக சுகாதார தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சமுதாயமே மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் உரிமைகளை மதிக்க ஏனையோரை பழக்கப்படுத்தல் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதன்முதலாக 1988 உருவானது.

இதுவரை உலகளாவிய ரீதியில் சுமார் 80 மில்லியன் பேர் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் முன்னெடுக்கப்பட்ட எச் ஐ வி தொற்று ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக பாலியல் நோய்த்தடுப்பு மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button