...
விளையாட்டு

உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானை வீழ்த்தியது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான 20க்கு20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி, 20க்க20 கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்ததுடன், 4-−1 என தொடரையும் இழந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தங்களுடைய முதல் இருதரப்பு தொடர் வெற்றியை பதிவுசெய்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 4வது 20க்கு20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. எனினும், நடைபெற்றுமுடிந்த இறுதி 20க்கு20 போட்டியில், 123 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 62 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 20க்கு20 கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்தது.

இதற்கு முன்னர், 2005ம் ஆண்டு சௌதெம்டனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 20க்கு20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதுவே, அவர்களுடைய குறைந்த 20க்கு20 ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலிய அணி தங்களுடைய குறைந்த 20க்கு20 ஓட்ட எண்ணிக்கையை பெற்று, மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தலை பதிவுசெய்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen