...
விளையாட்டு

உலக சாதனைக்கு சொந்தக்காரரான டிவைன் பிராவோ.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கிண்ணம் வென்ற அணியின் செயின்ட் கிட்ஸ் நெவிஸ் & பாட்ரியட்ஸ் அணியின் தலைவருமான டிவைன் பிராவோ உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

ரி 20 போட்டிகளில் அதிகமான வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்தவர் என்கின்ற பெருமையை மேற்கிந்திய தீவுகளின் கெரான் பொலார்ட் வசமுள்ளது, பிரான்சைஸ் போட்டிகளில் அதிகமானவற்றில் விளையாடியிருக்கும் பொல்லார்ட், மொத்தமாக 15 சம்பியன்ஸ் கிண்ணங்களை வென்றுள்ளார்.

ஐபிஎல் இன் மும்பை இந்தியன்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணிகள் போன்றவற்றில் விளையாடி மொத்தம் 15 சம்பியன் வெற்றி கிண்ணங்களை தனதாக்கிக்கொண்டுள்ளார். இந்த சாதனையை டிவைன் பிராவோ சமப்படுத்தினார்.பிராவோ பெற்றுக்கொண்டதும் 15 வது ரி 20 கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுமாத்திரமல்லாமல் அதிக ரி 20 போட்டிகளில் விளையாடிய வீரராக 566 போட்டிகளில் விளையாடிய பொல்லார்ட் முதல் இடத்தில் இருக்கிறார், இந்த போட்டியில் பிராவோ விளையாடியதும் 500 வது ரி 20 போட்டியாகவும் அமைந்தது.

ஐபிஎல் போட்டிகளில் பிரபலமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராகவும் பிராவோ வருகின்றமையும் இங்கு நினைவுபடுத்தத்தக்கது.

ஆகமொத்தத்தில் டிவைன் பிராவோ ரி 20 போட்டிகளில் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரரானார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen