செய்திகள்விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்.?

உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்சிப் இறுதிப்போட்டியின் நேற்றைய நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் இன்று இந்த போட்டி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி சீரற்ற வானிலையால் நேற்று நாணய சுழற்சியேனும் இடம்பெற்றிருக்கவில்லை.

நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் முற்றாக கைவிடப்பட்ட நிலையில் இன்றையதினம் முதல் எதிர்வரும் நான்கு நாட்களும் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தைக் காட்டிலும் அரை மணி நேரம் அதிகமாக விளையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, சவுத்ஹெம்ப்டனில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலுக்கமைய முதல் இரு இடங்களிலுள்ள அணிகள் இறுதிப்போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கமைய பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் இந்தியா அணி 17 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 520 புள்ளிகளை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 420 புள்ளிகளை பெற்று 2ம் இடத்திலுள்ளது.

இந்நிலையில் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Articles

Back to top button