உலகம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் இரண்டாம் இடம்..?

 

2018-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை முன்னணி பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தையும், வாரன் பபெட் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கடந்த ஆண்டு 544-வது இடத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு 766 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்து வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடியின் பெயர் இந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் இல்லை. உலக பணக்காரர்கள் பெயர் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 19-வது இடத்தையும் அவரின் இளைய சகோதரர் அனில் அம்பானி 887 வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

22 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button