செய்திகள்மலையகம்

உலக முடிவின் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த ஒருவரை காணவில்லை..

மடுல்சீமை – பிட்டமாறுவ பகுதியில் நேற்று
உலக முடிவைப்பார்க்க சென்ற 12 பேர் அடங்கிய சுற்றுலா குழுவினரில் ஒருவர் நேற்றிரவு (06/02) உலக முடிவின் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து காணமல் போயுள்ளார்.

குறித்த குழுவினர் நேற்றிரவு அப்பகுதியில் முகாமிட்டு இக்குழுவினர் தங்கியிருந்துள்ளனர்.

பள்ளத்தாக்கில் விழுந்தவரை தேடும் பணியில் இராவணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com