...
செய்திகள்

உலோக வெளியினால் தடுக்கப்பட்ட லொறி விபத்து

நேற்று (05) மாலை பண்டாரவளையில் இருந்து காலி நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று எல்ல 24 கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வீதியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உலோக வேலியில் லொறி மோதி மீண்டும் வீதிக்கு திரும்பி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொறி ஓட்டுனரோ, உதவியாளரோ காயம் அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

லொறியின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக லொறியின் சாரதி தெரிவித்தார்.

லொறி வீதியை விட்டு விலகி கவிழந்திருந்தால் சுமார் 1000 அடி பள்ளத்தில் கவிழந்திருக்க வாய்ப்பிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து வீதியில் பயணித்த கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் இவ்வாறு பதிவாகி இருந்தது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen