...
செய்திகள்

உள்நாட்டு சேதன உரங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

2022 யால போகத்துக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்நாட்டு உரங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் இரண்டு அரசாங்க உர நிறுவனங்கள் ஊடாக குறித்த கொள்வனவுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், யால போகத்துக்காக விவசாயிகளுக்கு உள்ளூர் சேதன உரங்களை வழங்குவதற்காக உரக் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உர மானியத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி இந்த கொள்முதல் நடவடிக்கை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen