சமூகம்செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

மாத்தறை – மொரவக்க பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரவக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button