காலஞ்சென்ற ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் கண்டி கந்தகெடிய பொது மயானத்தில் நேற்று (23) பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி வரை ஊடத்துறைக்காக பணியாற்றிய சந்திரமதி குழந்தைவேல் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
அன்னாரது பூதவுடல் புஞ்சி பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் 22/11/2020 அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கந்தகெடிய கீழ் பிரிவில் உள்ள அன்னாரின் வீட்டுக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று (23) பிற்பகல் நடைபெற்ற இறுதிக் கிரியைகளின் பின்னர் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் கந்தகெடிய கீழ் பிரிவு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.